மும்பை பங்குச் சந்தையில் சரிவில் இருந்து மீண்ட அதானி குழுமத்தின் 8 நிறுவனப் பங்குகள்

0 2417

அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் போது மீட்சியைக் கண்டுள்ளன.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் நேற்று காலை 7சதவீதத்திற்கும்மேல் சரிவடைந்த நிலையில், மாலையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் உயர்ந்தது.

அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி வில்மர், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி ஆகியவற்றின் பங்குகளின் விலையிலும் உயர்வு காணப்பட்டது.

இம்மாத இறுதிக்குள் 690 மில்லியன் முதல் 790 மில்லியன் டாலர் வரையிலான கடன்களை முன்கூட்டியே செலுத்தவோ அல்லது திருப்பிச் செலுத்தவோ அதானி குழுமம் விரும்புவதாக தகவல் வெளியானதையடுத்து அதன் பங்குகள் உயர்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments