சென்னையில் பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை.. ரூ.66 லட்சம் மதிப்புள்ள தங்கம்- வைர நகைகள் கொள்ளை!
சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 66 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க - வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோனிகா கலர் லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் ஹைதராபத்திற்கு சுற்றுலா சென்று நேற்று மாலை சந்தோஷ் குமார் வீடு திரும்பி உள்ளார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ மற்றும் லாக்கரில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
Comments