நடப்பு நிதி ஆண்டில் மொபைல்போன் ஏற்றுமதி ரூ.82,620 கோடியாக உயரும் - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் மொபைல்போன் ஏற்றுமதி சுமார் 82ஆயிரத்து 620 கோடி ரூபாயாக உயரும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொபைல் போன் உற்பத்திக்குத் தேவையான 99 சதவீத உதிரி பாகங்கள் உள்நாட்டிலேயே கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சம் புதிய வேலைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 387 மாவட்டங்களில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
Comments