கோவில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல்.. 3 கிராமங்களில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

0 2041

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அங்கு 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அன்பில் ஜங்கமராஜபுரத்தில் அமைந்துள்ள ஆச்சிராம வல்லி அம்மன் கோவில் திருவிழாவினை இந்த ஆண்டு நடத்துவது இயலாது என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை மீறி மற்றொரு பிரிவினர் மாசி மாத காப்புக்கட்டு தேர்திருவிழாவை தன்னிச்சையாக நடத்த ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் ஆட்சியர் உத்தரவுப்படி, ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழஅன்பில் மற்றும் கோவில்கள் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments