நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவன உரிமையாளர் அவரது 3 மகன்கள் கைது!
நாகப்பட்டினத்தில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவன உரிமையாளர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி பைனான்சில், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர சீட்டு, வைப்புத் தொகை ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக சேமிப்பு கணக்குகள், சீட்டு முதிர்வு தொகை மற்றும் பண பரிவர்த்தனை நிறுத்தப்பட்டதால், முதலீடு செய்து ஏமாந்த வாடிக்கையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.
மோசடி தொடர்பாக சிவசக்தி நிறுவன உரிமையாளர் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments