''போலி டாக்டர் பட்டங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பில்லை..'' - அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ்..!
சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் பெயரை தவறாக பயன் படுத்தி அரசு முத்திரையுடன் விழா நடத்தி 35 பேருக்கு போலியாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்த அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ் , இந்த நிகழ்ச்சிக்கு கடந்த நவம்பர் மாதமே அனுமதி கோரியதாகவும், முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பழைய நீதி அரசர் வள்ளி நாயகத்தின் பரிந்துறையின் பேரில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது அண்ணா பல்கலை கழகத்தின் டாக்டர் பட்டம் அல்ல என்றும் சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டு , பட்டம் வழங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்
Comments