'சீன் பை சீன்' தான் கதையை நகர்த்த வேண்டும், இப்போதே கிளைமாக்சை சொல்ல முடியாது - கமல்ஹாசன்..!

0 2429

'சீன் பை சீன்' தான் கதையை நகர்த்த வேண்டும், இப்போதே கிளைமாக்சை சொல்ல முடியாது என திமுகவுடனான கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதலமைச்சரின் 70 ஆண்டு பயணத்தை விளக்கும் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த கமல்ஹாசன், அதனை பார்வையிட்டார்.

பின்னர் பேட்டியளித்த அவர், திமுகவின் கொள்கையுடன் நீண்ட நாட்களாக ஒத்துப்போவதாக கூறினார். 

முன்னதாக, புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில், தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, தடுமாறி அருகில் இருந்த கேமராவில் மோதிய அமைச்சர் சேகர் பாபுவிற்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments