நாகையில் விட்டுவிட்டு பெய்த மழையால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் பாதிப்பு..!
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விட்டுவிட்டு பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்ததோடு, அறுவடை பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பெய்த மழையால் வலிவலம், திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் பகுதிகளில் அறுவடை களத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை விவசாயிகளும், கொள்முதல் நிலையங்களில் உள்ள மூட்டைகளை பணியாளர்களும் தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள 172 நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமார் 75 நிலையங்கள் திறந்தவெளியில் செயல்படுவதால் நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Comments