சென்னையில் ஆயுதங்களுடன் சிக்கிய 3 பேர் கும்பல்.. ஒருவரை கொலை செய்ய வந்ததாக 3 பேரும் விசாரணையில் தகவல்!

0 2283

சென்னை பெரியமேடு பகுதியில் ஒருவரை கொலை செய்வதற்காக கத்திகளுடன் திருட்டு வாகனத்தில் சுற்றிவந்த 3 பேர் போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினர்.

சென்னை மோர் மார்க்கெட் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது, ஒரு மோட்டார் சைக்களில் வந்த 3 பேரை  மடக்கி விசாரித்தனர்.

இதில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ராஜா, டில்லி பாபு, சத்திவேல்  என்பதும், பெரியமேடு பகுதியில் ஒருவரை கொலை செய்ய திருட்டு வாகனத்தில் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments