துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியான நிலையில் 69 பேர் காயம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு கடந்த 6ம் தேதியன்று ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் பெரும் சேதத்தை சந்தித்தன.
இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் தங்களை வீடுகளை இழந்துள்ளனர்.
தற்போது மீட்புப் பணிகள் முடிந்து புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துருக்கியின் மாலத்யா மாகாணத்தில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியான நிலையில், 69 பேர் காயமடைந்தனர்.
Comments