சென்னை - புதுச்சேரி இடையிலான தனியார் சரக்குக் கப்பல் போக்குவரத்து சென்னை துறைமுகத்தில் இருந்து தொடங்கியது..!
சென்னை - புதுச்சேரி இடையிலான தனியார் சரக்குக் கப்பல் போக்குவரத்து சென்னை துறைமுகத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.
Global logistics எனும் நிறுவனத்தை சேர்ந்த Hope seven எனும் இந்த கப்பல் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும்.
சாலை மார்க்கமாக சரக்குகளை எடுத்துச் செல்லும்போது கண்ட்டெய்னர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்றும் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகையில் அது 23 ஆயிரம் ரூபாயாகக் குறையும் என்றும் சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.
இக்கப்பலில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக 106 கண்டெய்னர்கள் இடம்பெறும் எனவும் அவற்றில் 86 கண்டெய்னர்கள் சாதாரண நிலையிலும் , 20 கண்டெய்னர்கள் குளிரூட்டப்பட்ட நிலையிலும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சரக்குகள் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுவதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் சுனில் பாலிவால் கூறினார். சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகம் வரை உள்ள 71 நாட்டிக்கல் மைல் தூரத்தை 12 மணி நேரத்தில் இந்த கப்பல் சென்றடையும்.
Comments