டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடிகள் - முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 25-ம் தேதி காலை, பிற்பகல் என இருவேளைகளில் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் நடைபெற்றன. தேர்வின் போது தேர்வுத்தாள் விநியோகித்ததில் பிரச்சனை எழுந்த நிலையில், தேர்வர்கள் பலர் அறையை விட்டு வெளியே வந்ததாகவும் புத்தகங்கள், செல்போன்களைப் பார்த்து தேர்வு எழுதியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வரும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தகுதி இழப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Comments