டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது ஏன்? - சிபிஐ அதிகாரிகள் விளக்கம்!
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மதுக்கொள்கை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் அதற்கான விளக்கத்தைத் தர இயலவில்லை என்பதால் 8 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கான மதுக்கொள்கையை அறிவித்த டெல்லி ஆம் ஆத்மி அரசு அதில் சில திருத்தங்களை செய்தது.
இந்தத் திருத்தங்கள் செய்ததில் முக்கியப் பங்கு சிசோடியாவினுடையது என்று தாங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருத்தங்கள் குறித்து தமக்குத் தெரியாது என்ற மணிஷ் சிசோடியாவில் பதில் திருப்திகரமான இல்லை என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.
Comments