ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

0 2234

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா காலமானதை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு Votingமையங்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாதோர் வீல்சேர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வாக்களிக்கின்றனர்.

தேர்தலை ஒட்டி தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குசாவடிகள் என அடையாளம் காணப்பட்ட 32 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருன்றனர்.

வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் வாக்குச்சாவடி மையங்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது இளைய மகனுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

பின்னர் பேசிய இளங்கோவன், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கே தான் வாக்குப்பதிவு செய்ததாக கூறி கலகலப்பூட்டினார். மேலும், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறிய இளங்கோவன், அழியும் வகையில் மை வைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா நவநீதன், பெரியண்ண வீதியில் உள்ள கலைமகள் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், தேர்தல் ஏற்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாகவும், தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறினார்.

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு, கட்சி துண்டு அணிந்து கொண்டு கருங்கல்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்ததால், அவர் உள்ளே செல்ல துணை ராணுவப்படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அவர் துணை ராணுவப்படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதி வழங்கினர். சிறிது நேரம் கழித்து கல்லு பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் தென்னரசு தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர், வாக்குப்பதிவின் போது விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை என்றார். மேலும், ஈரோட்டில் அனைத்து கட்சிகளும் நாகரீக அரசியலை தான் முன்னெடுப்போம் என்றும் கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஆனந்த், கட்சி துண்டு மற்றும் கட்சியின் கரை வேஷ்டி அணிந்து அக்ரஹாரம் மதரஸா பள்ளியில் வாக்களிக்கச் சென்றதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கும், தேர்தல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வேஷ்டியை மாற்றிக் கொண்டு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதை அடுத்து, அவர் கட்சி துண்டி நீக்கிவிட்டு வேஷ்டிக்கு பதில் பேண்ட் அணிந்து வந்து அதே வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments