டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது நடவடிக்கை குறித்து சி.பி.ஐ விளக்கம்!
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது நடவடிக்கை குறித்து சி.பி.ஐ விளக்கமளித்துள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், 2ம் கட்ட விசாரணைக்கு சி.பி.ஐ தலைமையகத்தில் ஆஜரான மணீஷ் சிசோடியாவிடம், 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
விசாரணையின்போது ஒத்துழைக்கவில்லை என்றும், முக்கிய கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதிலளிக்கவில்லை என்றும் சி.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிசோடியா-வை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி காவலில் வைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இன்று நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மணீஷ் சிசோடியா கைது நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மோசமான அரசியல் என்றும், டெல்லி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Comments