பாகிஸ்தான் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்
பாகிஸ்தான் மருத்துவமனைகளில் இன்சூலின் உள்ளிட்ட முக்கியமான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தான், பல்வேறு மருந்துகளின் இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் இன்சூலின், டிஸ்பிரின், கால்போல், போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின்போது பயன்படும் அனஸ்தியா மருந்து, 2 வாரங்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments