வடகொரியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு... வேளாண் கொள்கையை சரிசெய்வது குறித்து அவசர ஆலோசனை!
கோவிட் பேரிடர் காலத்திற்குப் பின்னர் வடகொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு அதிகரித்துள்ள போதும் இன்னும் பஞ்சம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
பலர் பட்டினியால் சாகும்நிலை குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரிய தலைவர்கள் அவசரப் பிரச்சினையாக சரியான வேளாண் கொள்கையை அமைப்பது குறித்து ஆலோசித்துவருகின்றனர்.
உணவுத் தட்டுப்பாடைக் கையாளத் தவறினால், அதிபர் கிம் ஜாங்கின் அணு ஆயுதத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவை இழக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments