ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிகாரிகளுக்கு ஜெர்மனி, கனடா அதிகாரிகள் மிரட்டல்..?
பெங்களூரில் நடைபெற்ற ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டின் போது, ஜெர்மனி மற்றும் கனடா அதிகாரிகளால் தாங்கள் மிரட்டப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஜி 20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து பிப்ரவரி 22 முதல் 25 வரை நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது உக்ரைன் போரை காரணம் காட்டி தாங்கள் மிரட்டப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டை ஜெர்மன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் கனடா சார்பில் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.
Comments