ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

0 2108

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, வரும் 27ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவனீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரச்சாரம் முடிவுற்ற நிலையில், வெளியூர் நபர்கள் மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வரும் திங்கட்கிழமையன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ஆம் தேதியன்று எண்ணப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments