துருக்கியில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக புதிய வீடுகளை கட்டும் பணிகள் தொடக்கம்
துருக்கியில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக புதிய வீடுகளை கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், சுமார் 15 லட்சம் மக்கள் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
துருக்கியில் இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓராண்டுக்குள் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் உறுதியளித்துள்ளார்.
Comments