உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் உதவ தயார்-பிரதமர் மோடி
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்-க்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய அடிப்படையிலான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 2 நாடுகளுக்கும் இடையே காற்றாலை, சூரிய ஒளி மின்சக்தி, பசுமை ஹைட்ரஜன் துறைகளில் ஒப்பந்தங்கள் (wind, solar energy and green hydrogen sector.) கையெழுத்தாகின. இதன்பின்னர் கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியில் தீர்வு காண வேண்டுமென ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருவதாக கூறினார்.
Comments