கொலம்பியா நீதிமன்றத்தில் மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற வழக்கு விசாரணை
கொலம்பியாவில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணை மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் முதல்முறையாக விசாரிக்கப்பட்டது.
கொலம்பியாவின் மக்தலேனா நிர்வாக நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட இரண்டு மணி நேர விசாரணையில், போக்குவரத்து குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மெட்டாவெர்ஸ் மூலம் நீதிமன்ற அறையில் தோன்றினர்.
அவர்களிடம் மாஜிஸ்திரேட் மரியா குயினோன்ஸ் விசாரணை நடத்தினார். இதன் மூலம் அதிவேக விர்ச்சுவல் ரியாலிட்டியில் விசாரணை நடத்திய முதல் நாடாக கொலம்பியா உள்ளது. மெட்டாவர்ஸ் அனுபவம் அற்புதமானது என நீதிபதி தெரிவித்தார்.
Comments