உச்சக்கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பிரச்சாரம்.. தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியோடு நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு அவர் வாக்கு சேகரித்தார்..
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கருங்கல்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஈரோடு கல்யாண சுந்தரம் வீதியில், டீக்கடை மற்றும் உணவகங்களுக்கு சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் உள்ளிட்டோர் சம்பத் நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
Comments