எதிர்கால சந்ததியினர் தேவையை புதிய கல்வி கொள்கை பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நாட்டின் கல்வி அமைப்பை புதிய கல்விக் கொள்கை மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காணொலி மூலம் மாணவர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய கல்வி கொள்கைக்கு ஆசிரியர்கள் பெரும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், இந்த ஆதரவு, கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய மத்திய அரசை ஊக்குவிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்ப வசதி, நாட்டில் புதிய வகை வகுப்பறைகளை கட்டமைக்க உதவுகிறது என்றும், ஆதலால் ஆசிரியர்களின் பணியானது இனி வகுப்பறையோடு நின்று விடாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அமிருத பெருவிழா பட்ஜெட்டில் இளைஞர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், வளைந்து கொடுக்காத தன்மையை கொண்ட கல்வித்துறையை மாற்றியமைக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.
Comments