வால்பாறை மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை
கோவை அருகே ஊருக்குள் புகுந்த மக்னா யானை மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்டு வால்பாறை மானாம்பள்ளி வனப் பகுதியில் விடப்பட்டது.
கோவை பேரூர் செல்வபுரத்தில் நுழைந்த மக்னா யானை அங்குள்ள தோட்டத்தில் புகுந்து பயிர்களை அழித்தும், ஊருக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்து வந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவர் உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் அந்த யானையை மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் விட சென்ற போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
Comments