பீஸ் ருசியாக இருக்கா..? மியாவ்.. ‘பூனை பிரியாணி’ அப்படித்தாம்பா இருக்கும்..! 11 பூனைகள் மீட்பு - உணவு பிரியர்கள் கலக்கம்

0 9553
பீஸ் ருசியாக இருக்கா..? மியாவ்.. ‘பூனை பிரியாணி’ அப்படித்தாம்பா இருக்கும்..! 11 பூனைகள் மீட்பு - உணவு பிரியர்கள் கலக்கம்

சென்னையில் உள்ள சில உணவகங்களில் விற்கப்படும் மட்டன் பிரியாணிக்காக கொல்லப்பட இருந்த பூனைகளை, போலீசார் மீட்டு விலங்குகள் நல ஆர்வலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் அசைவ பிரியர்களிடம் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே இருவர் , பூனைகளை பிடித்து வலையில் அடைத்து வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செளகார்பேட்டை விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பராணி என்பவர் இது தொடர்பாக ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஏழுக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் 11 பூனைகளையும் மீட்டு, திருவள்ளூர் அடுத்த அம்மம்பாக்கம் பகுதியில் விலங்கு நல பராமரிப்பு மையம் நடத்தி வரும் சீராணி என்பவரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சென்னையில் பல்வேறு வீடுகளில் ஆசையாக உரிமையாளர்கள் வளர்க்கக்கூடிய பூனைகளை உரிமையாளருக்கு தெரியாமல் வலை வைத்து பிடித்து தோலை உரித்து ஓட்டல்களுக்கு மட்டன் இறைச்சியுடன் கலந்து விற்கப்படும் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இதற்காக அதிகாலை நேரத்தில் நரிக்குறவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வலை விரித்து பூனைகளை பிடித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் அயனாவரம், செளகார்பேட்டை ,திருவான்மியூர், பல்லாவரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சில ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளுக்கு குறைவான விலைக்கு பூனை இறைச்சியை நரிக்குறவர்கள் விற்று வருவதாகவும், குறிப்பாக குடியிருப்புகளிலிருந்து பிடிக்கப்படும் பூனைகளை பல்லாவரம் வாரச்சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.

அனைத்து ஓட்டல்களிலும் இது போன்று நடப்பதில்லை என்றாலும், சில ஓட்டல்களில் நரிக்குறவர்களிடம் வாங்கும் எலும்பில்லா பூனைக்கறியை , மட்டன் இறைச்சியுடன் கலந்து மட்டன் கோலா உருண்டை, மட்டன் பிரியாணி , மட்டன் சுக்கா போன்றவற்றை தயாரித்து விற்பது தெரியவந்துள்ளது. மட்டனை போன்றே பூனைக்கறியும் ஒரே பதத்தில் இருப்பதால் வித்தியாசம் தெரியக்கூடாது என்பதற்காக அதனுடன் கலக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ஓட்டலில் சிக்கன் உடலுக்கு சூடு என்று மட்டனை விரும்பி உண்ணும் உணவுப் பிரியர்களுக்கு இந்த தகவல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நரிக்குறவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகளை விலங்கு நல ஆர்வலர் சீராணி மீட்டு தனது விலங்கு நல பராமரிப்பு மையத்திற்கு கொண்டு வந்து மூன்று வேளையும் உணவு கொடுத்து பராமரித்து வருவதாக தெரிவித்தார்

ருசியா இருக்குப்பா... இன்னொரு பீஸ் போடு என்று கேட்டு வாங்கி சாப்பிடும் உணவுப்பிரியர்கள் தட்டில் இருப்பது பூனைக்கறியாக கூட இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், மட்டன் பிரியர்கள் ஆடிபோய் உள்ளனர்.

பூனைக்கறி பீதியை போக்கும் வகையில் அனைத்து ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் , சாலையோர உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு இறைச்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments