2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜெர்மனி பிரதமர் இன்று இந்தியா வருகை.. 6 நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு..!
ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார்.
காலையில் டெல்லி வந்திறங்கும் அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்,பிரதமர் மோடியும், ஓலாப் ஸ்கோல்ஸ்சும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
உக்ரைன் மோதல், இந்தோ - பசிபிக் பகுதியில் நிலவும் சூழல் மற்றும் தூய்மையான எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, 520 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல் கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Comments