காதலனை கரம் பிடிக்க இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் சிறுமி.. பெற்றோரிடம் ஒப்படைத்த இந்திய அதிகாரிகள்!

0 2212

காதலனை கரம் பிடிக்க, இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டு சிறுமியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இக்ரா ஜீவனி என்ற 16 வயது சிறுமிக்கு, ஆன்லைன் கேம்ஸ் மூலம் உத்தர பிரதேச இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இளைஞரை மணக்க தீர்மானித்த இக்ரா, இந்திய விசா கிடைக்காததால், நகைகளை விற்று, விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து நேபாளம் வந்துள்ளார்.

இக்ராவின் இந்திய காதலனும் நேபாளம் சென்று, அவரை மணமுடித்து, பின் இருவரும் எல்லை வழியாக இந்தியா வந்துள்ளனர். ஐ.டி. எஞ்சினியரான சமீர் அன்சாரியை மணமுடித்ததாக நினைத்த இக்ராவிற்கு, அவரது உண்மையான பெயர் முலாயம் சிங் என்பதும், பெங்களூருவில் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றுவதும் தெரியவந்தது.

பாகிஸ்தானிலுள்ள தனது பெற்றோரிடம் வாட்ஸ்அப் மூலம் இதனை தெரிவிக்க, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மூலாயம் சிங்கை கைது செய்த போலீசார், இக்ராவை மீட்டு வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments