நீங்க அவங்களுக்கு மகளா? அம்மாவா ? ஜெ.கெட்டப் பிரேமாவை பங்கமாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்..!

0 2477

மெரீனாவில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ஜெயலலிதா கெட்டப்பில் வந்த பெண் ஒருவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு செய்த அலப்பறைகள், காண்போருக்கு பொழுதுபோக்காக அமைந்தது. கருப்பு சபாரி போட்ட ஆசாமிகளை காரை சுற்றி ஓடிவர வைத்து அந்த பெண் அடித்த கூத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி சென்ற பின்னர். கருப்பு சபாரி போட்ட ஆசாமிகள் சுற்றி ஓடிவர வெள்ளைக்காரில், பெண் ஒருவர் வந்து இறங்கினார்..!

மதுரையை சேர்ந்த பிரேமா என்ற அந்த பெண் ஏற்கனவே தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று சிரிக்காமல் கூறி வந்த நிலையில், தற்போது கூடுதல் ஆட்களை கையோடு அழைத்து வந்து நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று நிரூபிக்க டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க இருப்பதாக கூறி அங்கிருந்தவர்களை கலகலப்பூட்டினார்.

தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று டெல்லியில் இருப்பவர்களே ஒப்புக் கொண்டுவிட்டார்கள் என்று போகிற போக்கில் அடித்துவிட்ட அந்த கெட்டப் பெண்மணியிடம், டெல்லியில் ஒப்புக் கொண்டது யார் ? என்று கேட்டதும் பதில் அளிக்காமல் சிரித்தபடி பம்மினார்.

எப்போது நிரூபிக்க போறீங்க என்று கேட்டதும், பின்னால் இருந்து சிலர் சொல்லிக் கொடுப்பதை உள்வாங்கி கிளிப்பிள்ளை போல ஏப்ரலில் என்று ஒப்பித்த அவர், அதிமுக 4 துண்டாக உடைந்து விட்டதால் தான் புதிதாக கட்சி தொடங்க இருப்பதாக கூறி காமெடி செய்தார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஆறுமாதத்துக்கு ஒருவர் ஜெயலலிதாவின் வாரிசு என்று சிலிப்பர் செல்போல கிளம்பி வருவது வழக்கமான நாடகமாக மாறிவருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments