கலிபோர்னியாவில் வீசும் கடுமையான பனிப்புயலுக்கு நடுவே முட்டைகளை மாறி மாறி பாதுகாக்கும் வெண்தலைக் கழுகுகள்!
வின் கலிபோர்னியா மாகாணத்தில் கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், வெண் தலை கழுகு ஜோடி ஒன்று தங்களது முட்டைகளை பாதுகாக்கப் போராடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தேசிய பறவையாக உள்ள வெண் தலைக் கழுகுகள், பறவைகள் கட்டும் மரக்கூடுகளிலேயே மிகப்பெரிய கூடுகளை கட்டும் சிறப்பு கொண்டவை.
பிக் பியர் வேலி பகுதியில் உள்ள உயரமான மலையில், சுமார் 145 அடி உயரமுள்ள ஜெப்ரி பைன் மரத்தின் மீது வெண் தலை கழுகு ஜோடி ஒன்று கூடு அமைத்து முட்டைகளை இட்டுள்ளது.
அந்த கூட்டின் அருகே பறவை ஆர்வலர்கள் கேமராவை பொருத்தியுள்ளனர். கடுமையான பனிப்புயலுக்கு நடுவே, ஜோடிக் கழுகுகள் தங்களது முட்டைகளை பாதுகாக்க உயிர் போராட்டம் நடத்தும் காட்சிகள் அந்த கேமராவில் பதிவாகியுள்ளன.
Comments