''உலகளவில் மக்களின் நலன் மீது கவனம் செலுத்தும் வகையில் ஜி20 கூட்டத்தில் விவாதம் நடைபெற வேண்டும்..'' - பிரதமர் மோடி..!
நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை, ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளிலும், அனைவரையும் உள்ளடக்கிய நிதி மேலாண்மையிலும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் ஜி20 அமைப்பின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.
அப்போது, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகள் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், உலக அளவில் மக்களின் நலன் மீது கவனம் செலுத்தும் வகையில் ஜி20 கூட்டத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
Comments