ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள்...75 கிலோ கேக் வெட்டி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கிய இபிஎஸ்..!

0 1829

ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக தலைமையகம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, தொண்டர்கள் ஏராளமானோர் ஒன்றுதிரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உற்சாக வரவேற்பளித்த நிலையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய அவர், 75 கிலோ எடையிலான கேக் வெட்டி தொண்டர்களுக்கு அளித்தார்.

அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிய அவர், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரையும் வெளியிட்டார்.

பின்னர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமுகாமை தொடங்கி வைத்த பழனிசாமி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments