கவுதம் அதானிக்கு கடந்த ஒரு மாதத்தில் ரூ.11.8 லட்சம் கோடி இழப்பு..!
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் கவுதம் அதானிக்கு142 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் 61.6 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 11.8 லட்சம் கோடி ரூயாய் இழப்பு ஏற்பட்டு, தற்போது 7.4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகும் முன்பு உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, தற்போது 27-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Comments