பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு 10ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது
தர்மபுரியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பத்தாண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில் அங்கிருந்த கண்ணன் என்பவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கடந்த பத்தாண்டுகளாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்து வருவது தெரியவந்தது.
இதனை அடுத்து கண்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஊசிகள், மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
Comments