மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு.. உதவியாக கும்கி யானை சின்னதம்பி வருகை..!
கோயம்புத்தூரில் மூன்று நாட்களாக போக்குக்காட்டி வரும் மக்னா யானையை ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ள நிலையில், உதவிக்காக கும்கி யானை சின்னதம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வரகளியாறு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை பல்வேறு இடங்களை கடந்து வந்து தற்போது பேரூர் எஸ்எம்எஸ் கல்லூரி அருகே முகாமிட்டுள்ளது.
தற்போது சமதள பகுதியில் இருப்பதால் இங்கு வைத்து யானையை பிடிப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவ குழுவினர் வரவுள்ள நிலையில், தேவைப்பட்டால் மேலும் 2 கும்கி யானைகள் அழைத்து வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments