சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி... சுரங்க இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

0 1700

சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 50-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மங்கோலியாவின் உள் பகுதியில் அமைந்துள்ள அலக்ஸா லெஃப்ட் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் உள்ளே சிக்கியிருக்கக் கூடுமென அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments