துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க அந்நாட்டு அரசு முடிவு
துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 47 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பகுதி ஊதியம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஊழியர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டுதல் மற்றும் உள்கட்டமைப்புகளை மறுகட்டமைப்பது போன்ற பணிகளுக்காக அந்நாட்டிற்கு 100 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
Comments