கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்த தாய், மகன் மீட்பு
ஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டனர்.
சுஜன் மாஜி - முன்முன் மாஜி தம்பதியினர் தங்கள் மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டபின் அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றுவந்த தன் கணவனை முன்முன் மாஜி வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
அதே பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து மகனுடன் தனியாகத் தங்கத் தொடங்கிய முன்முன் மாஜி, வீடியோ கால் மூலமாக மட்டுமே கணவருடன் தொடர்புகொண்டிருந்தார்.
சுஜன் வேண்டுகோளின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்து தாய், மகன் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Comments