அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

0 4114

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

கடந்த ஆண்டு  ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments