சட்டவிரோதமாக பச்சிளம் பெண் குழந்தை விற்பனை.. பெற்றோர், செவிலியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது..!

0 1716

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்,  40 ஆயிரம் ரூபாய்க்கு பெண் குழந்தையை விற்பனை செய்ததாக குழந்தையின் பெற்றோர், அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாரனேரி, ஈஸ்வரன் காலனியை சேர்ந்த பாண்டீஸ்வரன்-பஞ்சவர்ணம் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் நான்காவதாக ஜனவரி மாதம்  பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தையை நாகர்கோயில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஜார்ஜ் - ஐரின் தம்பதிக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் குழந்தையின் பெற்றோர், இடைத்தரகர்களான செவிலியர்கள் அஜிதா, முத்துமாரியம்மாள், ஐரின் ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஜார்ஜை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments