தமிழகத்தில் முதன்முறையாக ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ-க்கு குவியும் பாராட்டுக்கள்..!
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார்.
கடந்த 20ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்மக்கும்பல் இரும்புக்கம்பியால் தாக்கி விட்டு தப்பினர்.
சிசிடிவி காட்சிகளின்படி விசாரணை நடத்தி கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
பெண்டு சூர்யா என்பவனை திருவள்ளூரில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியால் சூர்யாவின் முழங்கால் பகுதியில் சுட்டு பிடித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments