பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவாலயத்தில் சாம்பல் புதன் அனுசரிப்பு..!
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிந்தநாளை அனுசரிப்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதனாக அனுசரிக்கப்படுகிறது. நாகர்கோயில் கோட்டாறு புனித சவேரியார் பேரலாயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் திரளானவர்கள் பங்கேற்று சாம்பலால் சிலுவை போட்டு தவக்கால வழிபாட்டை தொடங்கினர்.
தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை போடப்பட்டது.
புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் தின திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
பாண்டிச்சேரி, புதுக்கோட்டை, சிவகங்கை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
Comments