காதல் விவகாரத்தில் இளைஞர் விபரீதம்? இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர்கள், உறவினர்கள் சாலை மறியல்

0 1939

நாமக்கல் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், இளைஞரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் அடுத்த கே.கே.வலசு பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் வீரமணி, மணியனூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டின் அருகே வசித்துவந்த 17 வயது சிறுமியை வீரமணி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரம் தொடர்பாக சிறுமியின் வீட்டார் கண்டித்ததால், மனமுடைந்த வீரமணி நல்லூர் பகுதியில் உள்ள கோவிலுக்குள் நுழைந்து, அங்கு கையை கத்தியால் கிழித்து கொண்டார்.

அங்கு வந்த பொதுமக்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், அதன் கண்ணாடியை உடைத்து வீரமணி தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments