நூதன முறையில் செல்போனைப் பெற்று ரூ.2.50 லட்சம் மோசடி.. வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டிய இளைஞர் கைது..!

0 5949
நூதன முறையில் செல்போனைப் பெற்று ரூ.2.50 லட்சம் மோசடி.. வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டிய இளைஞர் கைது..!

கோயம்புத்தூரில், நூதன முறையில் செல்போன்களை ஹேக் செய்து, வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவையைச் சேர்ந்த வினோத் குமார், ஸ்டான்லி ஜோன்ஸ், ஆனந்தகுமார் ஆகியோர் சைபர் கிரைம் போலீசில் அளித்திருந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கோவை புதூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற பட்டதாரி இளைஞரை கைது செய்தனர்.

பலரிடம் நண்பர்களாக பேசி பழகும் விக்னேஷ், உறவினர்களிடம் பேசிவிட்டு தருவதாகக் கூறி செல்போனைப் பெற்று அதிலிருக்கும் வங்கிக் கணக்கு, குறுந்தகவல் உள்ளிட்ட விவரங்களுடன் ஓ.டி.பி.எண்ணையும் தனது செல்போன் எண்ணிற்கு வரும்படி மாற்றியமைத்து, இரண்டரை லட்ச ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments