ராணுவ வீரர் பிரபு உயிரிழந்த விவகாரம் : 7 முன்னாள் ராணுவத்தினருடன் ஆளுநரை சந்தித்து அண்ணாமலை புகார்..!
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்த விவகாரத்தில் முதலமைச்சரின் பணி நம்பிக்கை ஊட்டுவது போல் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக, 7முன்னாள் ராணுவ வீரர்களுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து அவர் புகார் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தங்களின் உள்ளக் குமுறல்களை ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.
Comments