இத்தன பேரோட காதலா...! முகநூலில் அடித்துக் கொண்ட அழகான ஆபீசர்ஸ் மாற்றம்..! குழாயடி சண்டையால் நடவடிக்கை

0 4596

முகநூலில் அந்தரங்க தகவல்களை பகிர்ந்து சண்டையிட்ட பெண் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு உதவியதாக கணவரும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சசிகலா பரப்பன அஹ்ரகாரா சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாக புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா. தற்போது கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ், அங்கு அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த 39 வயதான ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ் குறித்து கடந்த இரண்டு நாட்களாக முகநூலில்  பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

சசிகலா பரப்பன அஹ்ரகாரா சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாக புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா. தற்போது கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ், அங்கு அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த 39 வயதான ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ் குறித்து கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

உலகமே கொரோனா பாதிப்பில் இருந்தபோது 2021ஆம் ஆண்டு ரோகிணி வசித்த அரசுக்குடியிருப்பில் சொகுசு நீச்சல் குளம் கட்டிய புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை என்று ரூபா கூறி உள்ளார்

கோலார் பகுதியில் உயிரிழந்த ஐஏஎஸ் அதிகாரி ரவி, ரோகினி உடனான காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறப்பிற்கும் ரோகிணிக்கும் தொடர்பிருக்கிறதா ? என்றும் அரசியல்வாதிகளை அரசு அதிகாரி சந்திக்க வேண்டிய காரணம் என்ன ? என்பது உள்ளிட்ட 20 வகையான கேள்விகளை ரூபா எழுப்பி உள்ளார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக ரூபா ஐபிஎஸ் தனது முகநூல் பக்கத்தில் ரோகிணி சிந்தூரியின் வித விதமான புகைப்படங்களை பகிர்ந்து, ''ரோகிணி சிந்தூரி கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார், இது சட்டப்படி தவறு, இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் புகார் அளித்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள ரோகிணி, 'நான் யாருக்கும் எனது புகைப்படங்களை அனுப்பவில்லை, ரூபா பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தும் எனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து எடுக்கப்பட்டவை என்று கூறியுள்ளார்.

நான் எந்தெந்த அதிகாரிகளுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பினேன் என்று அவர்களது பெயரை வெளியிட வேண்டும் என்றும், எனது தனிப்பட்ட படங்களை பகிர்ந்ததன் மூலம் அவரின் தரம் என்னவென்று தெரிந்துவிட்டது என்று காட்டமாக சாடி இருந்தார் ரோகினி.

குழாயடி சண்டை போல இரு பெண் அதிகாரிகளும் முறைகேடுகள் குறித்து முக நூலில் சண்டையிட்டு வந்ததால் உஷாரான கர்நாடக அரசு இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மனைவி ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், நிலப்பதிவு ஆணையராக பணியாற்றி வந்த அவரது கணவர் முனேஷை, தலைமை செயலக நிர்வாக பிரிவுக்கு இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments