ரஷ்யாவை போர்க்களத்தில் ஒருபோதும் வீழ்த்த முடியாது - அதிபர் புதின்
ரஷ்யாவை வீழ்த்த முடியாது என தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவை வீழ்த்தி விடலாம் என்ற தவறான நம்பிக்கையில், அமெரிக்காவால் வழிநடத்தப்படும் நேட்டோ படைகள் உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார்.
உக்ரைன் போர் ஒருவருட காலத்தை நெருங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதிபர் புதின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு மோதலை, உலகளாவிய மோதலாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாகவும், மேற்கத்திய நாடுகளே உக்ரைனில் மோதல் அதிகரிப்பதற்கு முழு பொறுப்பு எனவும் குற்றஞ்சாட்டினார்.
மோதலை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகவும், ஆனால் முற்றிலும் வேறான சூழல் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments