ராணுவ வீரரை கொலை செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசப் பேச்சு..!
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை சிவானந்தா சாலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பாஜகவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகரும் முன்னாள் ராணுவ அதிகாரியான கர்னல் பாண்டியன், ராணுவ வீரர் பிரபுவை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டுமென்றார்.
ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்க மாட்டோம் என ஆவேசமாக பேசினார்.
Comments