வடகொரியா நடத்தியுள்ள அணு ஆயுத சோதனைகள்.. சீனா, ஜப்பான், தென்கொரிய நாடுகளில் கதிர்வீச்சு அபாயம்
வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனைகளால் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், அணு ஆயுத சோதனைகளின் போது வெளிப்படும் கதிர்வீச்சுகள், வட கொரிய மக்களை மட்டுமின்றி, தென்கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை பாதிப்பதுடன், நிலத்தடி நீராதாரங்களையும் மீன்பிடி தொழிலையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2017 வரையில் ரகசியமாக 6 முறை வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments