இணையவழி பண பரிவர்த்தனையான இந்தியாவின் UPI, சிங்கப்பூரின் PayNow இணைப்பு..!
இணையவழி பண பரிவர்த்தனையான இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இணைப்பு நிகழ்ச்சி பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முன்னிலையில் நடைபெற்றது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல் பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, UPI மூலம் அதிகளவில் பணம் செலுத்தப்படுவதால், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் விரைவில் ரொக்கப் பணப்பரிமாற்றத்தைவிட அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.
UPI மற்றும் PayNow இணைப்பு மூலம் புலம்பெயர்ந்தவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு உடனடியாகவும் குறைந்த கட்டணத்திலும் பண பரிமாற்றம் செய்ய முடியும்.
Comments